Mar 15

மட்டக்களப்பில் மூன்று ஆலயங்களின் உண்டியல்கள் உடைப்பு

மட்டக்களப்பு – கிரான், கிண்ணையடி பகுதியில் மூன்று ஆலயங்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.

கிண்ணையடி மாணிக்க பிள்ளையார் ஆலயம், கிண்ணையடி மகா விஷ்ணு ஆலயம், கிண்ணையடி நாகதம்பிரான் ஆலயம் என்பவற்றின் கோயில் உண்டியல்களே நேற்றிரவு (14) உடைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை மூன்று ஆலயங்களுக்கும் வாழைச்சேனை பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் குறிப்பிட்டனர்.