Aug 20

கேரளா நிவாரணத்திற்கு ரூ. 5 கோடி கொடுத்தாரா ஷாருக் கான்! - உண்மை இது தான்

பாலிவுட் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் ஷாருக் கான் கேரளா வெள்ளத்திற்கு, தான் நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக நிதி உதவி அளித்துள்ளார்.

கேரளா வெள்ளத்திற்கு நிதி உதவி :

வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரளா மாநிலத்திற்கு உலகமெங்கும் வருத்தமும், பிரார்த்தனையும் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் கேரளா மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களின் துயரத்தை துடைக்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

ஷாருக் கான் நிதி உதவி:

இந்தியாவின் அனைவராலும் அறியப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக் கான். இவர் நடத்தி வரும் மிர் அறக்கட்டளை சார்பாக 21 லட்சம் ரூபாய் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார். 

பல்வேறு மாநிலங்கள் நிவாரண நிதியாக ரூ. 10 கோடி அளித்து வருகின்றன. ஆனால் சமூக வளைத்தளங்களில் நடிகர் ஷாருக் கான் மட்டும் ரூ. 5 கோடி நிவாரண நிதி அளித்துள்ளதாக வதந்தி பரவியது. தற்போது அவர் 21 லட்சம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.