Aug 20

மஹிந்தவின் பாவங்களைக் கழுவியுள்ளோம்: ரணில் கூறுகிறார்!

மஹிந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பாவங்களுக்கான பரிகாரங்களைச் செலுத்திவிட்டு மக்களுக்கான புண்ணியங்களை ஆற்றுவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்காவின் தலைமை மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


கடந்த ஆட்சியில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெற்றுள்ள கடன் தொகையினை தற்போதைய அரசாங்கம் மீளச் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறை மாவட்டம் பஸ்கொடை பிரதேச செயலகத்தின் 25ஆம் ஆண்டு நிறைவினையொட்டி 1000 பயனாளிக் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஊருபொக்க பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன்போது மக்கள் முன் உறையாற்றிய தலைமை மந்திரி,

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் போல தற்போது நடைமுறையிலுள்ள நல்லாட்சி அரசாங்கத்தினாரான நாம் மேற்கொள்வது இல்லை என எம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி பெற்றுள்ள கடன் தொகையினையே நாம் தொடர்ந்து செலுத்தி வருகின்றோம். அதன் காரணத்தினாலேயே எமக்கு எமது அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள காலதாமதமானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது பிரசித்தமாக அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அமைச்சு பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சு ஆகும். 54ஆயிரம் மில்லியன் ரூபாக்கள் கடனாக பெறப்பட்டு அந்த அமைச்சின் கீழ் 54 பெருந்தெருக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தாலும், அதில் 28 பெருந்தெருக்களின் அபிவிருத்தி பலவந்தமாக மேற்கொள்ளப்பட்டதாகும்.

அபிவிருத்திக்குட்படுத்தப்பட்ட வீதிப் பிரதேசங்களில் இருந்த மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பலவந்தமாக வெளியேற்றியே வீதி அபிவிருத்திகளை மேற்காண்டுள்ளனர். எனினும் அவர்களுக்கான நட்டஈடும் வீதி அபிவிருத்தியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கேனும் அவரது ஆட்சிகாலத்தின் போது வழங்கப்படவில்லை. தற்போது நாம் தான் அவற்றையும் செலுத்தி வருகின்றோம்.

9 வருடங்களில் அவர்களினால் 183 கிலோ மீட்டர்கள் பெருந்தெருக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது எனினும் நல்லாட்சி அரசங்கம் இரண்டு வருடங்களில் 185 கிலோ மீட்டர்கள் அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளது.

அவர்கள் பாரிய அளவில் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக பெற்றப்பட்ட பணங்களுக்கு என்ன ஆனது என்பதை மாத்திரமே நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். பெருந்தெருக்கள் அமைச்சினூடாக மாத்திரமல்லாது பல்வேறு அமைச்சின் கீழ் கடந்த ஆட்சியில் பாரிய அளவிளான பணம் கடனாக பெறப்பட்டுள்ளது. அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாவங்களுக்கு பரிகாரங்களை மீள செலுத்திவிட்டு மக்களுக்கான புண்ணியங்களை செய்யவும் இன்று எமக்கு சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

பெற்ற கடன்கள மீள செழுத்த முடியாத நிலையிலேயே 2014அம் ஆண்டு இறுதியில் தேர்தல் நடாத்தப்பட்டது. பொருளாதாரத்தில் நாடு வீழ்த்ப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் சேர்ந்து நிறுத்தினோம். தற்போது அரசாங்கம் எனும் ரீதியில் நாம் நமது கடமையை ஆற்றிவருகின்றோம். இந்த கடனைச் செலுத்தவேண்டிய அவசியம் நாட்டின் எதிர்கால சந்ததியினருனக்கு ஒருபோதும் ஏற்படாது என்பதை கூறிவைக்க விரும்புகிறேன்.” என்றார்.