Aug 20

நீர்த்தேக்கத்தில் மிதந்துவந்த சடலத்தால் பரபரப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் அணைக்கட்டு பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்க அதிகாரிகள், சடலமொன்று மிதப்பதைக்கண்டு தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார் சடலத்தை மீட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.