Aug 20

கேரளா வெள்ளத்திற்கு உதவும் பாகிஸ்தானியர்கள் - வெளிச்சம் போட்ட டிடி

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் பகிர்ந்துள்ள பாகிஸ்தானியர்கள் கேரளா வெள்ளத்திற்கு நிவாரண நிதி வழங்குவதாக கூறும் வீடியோ வைரலாகி வருகின்றது. 

வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரளா மாநிலத்திற்கு உலகமெங்கும் வருத்தமும், பிரார்த்தனையும் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் கேரளா மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களின் துயரத்தை துடைக்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

அந்த வகையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்துள்ள டிடி, கேரளாவின் துயரை துடைக்க பாகிஸ்தானியர்கள் தங்களுக்கு முடிந்த விஷயத்தை செய்வதாக கூறும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், “துபாயில் உள்ள பாகிஸ்தானியர்களான நாங்கள், கேரளாவின் கோர வெள்ளத்திற்கு நிவாரண நிதி கொடுக்கும் பொருட்டு, தங்களின் ஒருநாள் சம்பளத்தை தருகிறோம்.” என அந்த வீடியோவில் கூறுகின்றனர்.