Aug 18

ரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்!

கிழக்கு ரஷ்யக் கடற்கரையில் அதிக உரோமங்கள் கொண்ட விசித்திர விலங்கொன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலுள்ள பெகாச்சியில் வெள்ளை நிறத்தில், அதிக உரோமங்களுடன், அவயவங்களை அடையாளம் காணமுடியாத அளவிற்கு இந்த உயிரினர் மண்ணில் புதையுண்டுள்ளது. மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குறித்த இராட்சத விலங்கினத்தின் உடலை கண்டுபிடிம்துள்ளனர்.

ஏறத்தாழ 4 தொன் நிறையையும் எட்டு மீட்டர் நீளத்தையும் கொண்டதாக இந்த உயிரினம் காணப்படுன்றது.

அண்மையில் இப்பகுதியில் பலத்த சூறாவளி வீசியுள்ள நிலையில், அதன்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு கரையொதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. குறித்த உயிரினம் பற்றி அறியும் ஆவலில் மக்கள் உள்ளனர் என்பதோடு, அப்பகுதிக்கு ஆய்வை மேற்கொள்ள அதிகாரிகள் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.