Aug 18

அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கும் வீடுகள் - பகீர் காட்சிகள்.!

கேரளாவில் வரலாறு காணாத அளவில் அதிகப்படியான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநில மக்கள் அதிகப்படியாக பாதிப்பினுக்கு ஆளாகியுள்ளனர். கனமழையின் காரணமாக இதுவரையில் சுமார் 324 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதாலும், நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தினாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மழை வெள்ளத்தினால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.


மாநில அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ள சூழலில், பிரதமர் மோடியும் இன்று கேரளா மாநிலத்தை நேரில் பார்வையிட்டு மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி நிவாரண நிதி அளிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக கேரளாவின் வளஞ்சேரி பகுதியில் உள்ள வீடுகள் அடுத்தடுத்து உள்ள வீடுகள் மண்ணில் புதையும் காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியுள்ளன.