Aug 18

நல்லாட்சி அரசில் சிவ பாதம் புத்த பாதமாக மாறிய அதிசயம்!

இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக தமிழ் பாரம்பரிய பிரதேசங்கள் திட்டமிட்ட முறையில் சிங்கள பாரம்பரிய பிரதேசங்களாக மாற்றப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கதிர்காம பகுதியில் பல தொன்மையான தமிழ் பாரம்பரிய விடயங்கள் சிங்கள பாரம்பரிய விடயங்களாக மாற்றம் பெற்றுள்ள நிலையில் , இலங்கையின் புகழ் பெற்ற சிவனொளிபாத மலையின் தொடக்க பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகை திட்டமிட்ட முறையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இப் பெயர் மாற்றம் எந்தளவு விரைவாக இடம்பெறுகின்றது என்பதை விளக்கும் வண்ணம் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.