Aug 18

யாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த கஞ்சா கடற்படையினர் மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 87 கிலோ 400 கிராம் நிறையுடைய கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

ஆனாலும் போதைப் பொருள் வினியோகிக்கும் முக்கிய கடற் பரப்பாக காங்கேசன்துறை கடற்பரப்பு உள்ளமை குறிப்பிடத் தக்கது.இதன் பின்னணியில் சில முகவர்கள் அரசியல் வாதிகளின் தயவில் இருப்பதனால் என பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத் துரை அதிகாரி தெரிவித்தார்.

தென்னிலங்கை அரசியல் வாதிகள் வட – கிழக்கு அபிவிருத்தியை விட இவ்வகையான தீயு விடயங்களிற்கு ஏன் அதிகளவு ஈடு பாடு காட்டுகின்றனர் எனும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.