Aug 18

வடக்கு மாகாண சபையால் 110 பேருக்கு முகாமைத்துவ உதவியாளர் நியமனம்

“வடக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று கைதடியில் உள்ள உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் உள்ள 195 முகாமைத்துவ உதவியாளர் சேவை வெற்றிடங்களுக்கு முதல் கட்டமாக 110 பேருக்கு நேற்று வழங்கப்பட்டது. வடக்குமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.”