Aug 18

லிபியாவில் முகமது கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை!!

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு அந் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

லிபியாவில் முகமது கடாபியின் ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட போது கடாபி அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள‍ை ஒடுக்குவதற்கு இராணுவத்தினரையும் தனது ஆதரவாளர்களையும் பயன்படுத்தி கடும் தாக்குதலை மேற்கொண்டார். இதில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் உயிரிழந்தனர். 


இறுதியில் கடாபியை அடித்துக் கொலை செய்த புரட்சியாளர்கள் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.

இந் நிலையில் கடாபிக்கு ஆதரவாக துணைபோனவர்களை புதிய ஆட்சியாளர்கள் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 128 பேர் மீது கொலை குற்றச்சட்டப்பட்டு அவர்கள் மீதான வழக்கு திரிபோலி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையல், 99 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டமையினால் அவர்களுள் 45 பேருக்கு நீதி மன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் ஏனையவர்களுக்கு  பல்வேறு விதமான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.