Jun 06

நான் கமல் சாரை பார்த்தேனே: துள்ளிக் குதிக்கும் அமலா பால்

ஜிம்முக்கு போன இடத்தில் கமல் ஹாஸனை பார்த்தவுடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார் அமலா பால். அமலா பால் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். திருட்டுப் பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்பட 5 படங்களில் பிசியாக உள்ளார்.

டேட்ஸ் பிரச்சனையால் தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறினார் அமலா என்பது குறிப்பிடத்தக்கது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம்முக்கு செல்கிறார் அமலா.