Aug 18

கனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி

கனேடிய பெண் வர்த்தகர்கள், ஆண் தொழில் முனைவோருடன் ஒப்பிடுகையில் சராசரியாக 58 சதவீதம் குறைவான வருமானத்தையே ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் இரு ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுத் தகவலுக்கமைய இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே வர்க்க தொழி;ல்களில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சராசரி வருமான வேறுபாடு, 68 ஆயிரம் கனேடிய டொலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேறுபாட்டிற்கு வெளிப்படையான தடைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள குறித்த ஆய்வு நிறுவனம், இந்த தடைகளை அறிந்துக் கொள்ள முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.