Aug 18

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் காலிறுதிக்கு தகுதி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 7-6 (8-6), 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

இன்னொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். கிவிடோவா (செக் குடியரசு), லிசி சுரென்கோ (உக்ரைன்) ஆகியோரும் வெற்றி பெற்று காலிறுதியை எட்டினர்.

மழையால் பாதிக்கப்பட்டு தொடர்ந்த 2-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா தாம்ஜனோவிக்கை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மழை காரணமாக சில ஆட்டங்கள் மறுநாளைக்கு தள்ளிவைக்கப்பட்டன.