Aug 17

டென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்!

டென்மார்க்கில் பரோயே என்ற தீவில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் முடிவில் கடல் நீர் சிவப்பாக மாறுகிறது.



டென்மார்க்கில் பரோயே என்ற தீவு உள்ளது. அங்கு கடலில் வாழும் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. திமிங்கலங்கள் கொல்லப்படுவதால் அவற்றின் உடலில் இருந்து வெளியாகும் ரத்தம் கடல் நீரில் கலப்பதாலேயே சிவப்பாக மாறுகிறது.

இந்த தீவில் வாழும் மக்கள் முதலில் கூட்டம் கூட்டமாக படகுகளில் கடலுக்குள் செல்வார்கள். அங்கிருந்து திமிங்கலங்களை கரைக்கு ஓட்டி வருகின்றனர். பின்னர் கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களை கூரிய கத்தியால் வெட்டிக் கொல்கின்றனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, 5 வயது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை திமிங்கலங்களை கொல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். குறித்த நிகழ்ச்சி 16ஆம் நூற்றாண்டில் இருந்து நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் இங்குள்ள மக்கள் அதை கண்டு கொள்வதில்லை. திமிங்கிலங்களைக் கொல்வதை ஆண்டுதோறும் திருவிழாவாக நடத்தி மகிழ்கின்றனர்.