Aug 17

மீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி

அட்டன் - செனன் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூடப்பட்டிருந்த அட்டன் - கொழும்பு பிரதான வீதி, இன்று பிற்பகல் திறக்கப்பட்டாலும் மீண்டும் மண் சரிவு அபாயம் காரணமாக அந்த வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக அட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை, பொது மக்கள் மற்றும் சாரதிகளிடம் கோரியுள்ளது.