Jun 06

புதிய குடிவரவுத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ள ஒன்ராரியோ அரசு

ஒன்ராரியோ மாகாணத்தின் பல்வேறு வகையான தொழிலாளர் தேவைகளைச் சந்திக்கும் வண்ணம் ஒன்ராரியோ மாகாணத்தின் குடிவரவுத்துறை  பலவகையான குடிவரவுத் திட்டங்களை செயற்படுத்துகின்றது.

ஒன்ராரியோ மாகாணத்தின் தொழிலாளர் தேவைகளைச் சந்திக்கக் கூடிய ஆற்றல், திறன், கல்வித்தகைமை உள்ளவர்களை இனங்கண்டு, கனடாவில் நிரந்தர வதிவுரிமை பெறும் பொருட்டு, ஒன்ராரியோ மாகாண அரசு அவர்களை மத்திய குடிவரவுத்துறைக்கு பரிந்துரை செய்யும் (Nominate) .

இதற்காக

1.ஒன்ராரியோ துரித நுழைவுத் திட்டம், (Express Entry Skilled Trades)

2. தொழில் தருனர்களால் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளவர்கள் (Employer Job Offer Stream)

3.தொழில் முயற்சியாளர்கள் திட்டம் (Entrepreneur Stream)

என்ற திட்டங்கள் தற்பொது செயற்படுத்தப்படுகின்றன.