Aug 17

இத்தாலியில் இடிந்து வீழ்ந்த பாலம் அருகில் தீ விபத்து!

இத்தாலியில் அண்மையில் இடிந்து விழுந்த பாலத்திற்கு அருகிலுள்ள வியாபார நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (வெள்ளக்கிழமை) காலை அங்கு புகை வெளிவந்த நிலையில், மீட்புப் பணியாளர்கள் சென்று பார்வையிட்டனர். இதன்போது வியாபார நிலையம் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் உடனடியாகத் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படாத போதும், பெருமளவான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தாலியில் ஜெனோவா பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் வரை உயிரிழந்தனர். சுமார் 15 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.