Aug 17

இத்தாலியில் உயிரை விட்ட இலங்கையர்

தனது குடும்ப உறவினர்களுடன் இத்தாலியில் குளம் ஒன்றில் நீராட சென்ற இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமூகவலைத்தளங்கள் ஊடாக தகவல் வெளியாகியுள்ளது.உயிரிழந்துள்ளவர் இத்தாலியில் பணிபுரிந்து வந்த மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

லெக்கோ – கோமோ – கோலிகோ என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தில் நீராடுவதற்கு முன்னர் அது தொடர்பில் முன்னரே அறியாமை காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டில் வாழும் இலங்கையர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.