Aug 17

வீட்டில் இருந்து பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது வாஜ்பாய் உடல்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புகழுடல் அவரது இல்லத்தில் இருந்து பாஜக அலுவலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இரவு 9.30 மணியளவில் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நேற்றிரவே வாஜ்பாயின் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.இதைத்தொடர்ந்து வாஜ்பாயின் உடல் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து

பண்டிட்தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் வாஜ்பாய் உடல் ஊர்வலமாக பாஜக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிற்பகல் 1 மணி வரை பாஜகவினர், பொதுமக்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படவுள்ளது.