Aug 17

யாழ் நகரில் பீதியை ஏற்படுத்தும் இருள் சூழ்ந்த வீதிகள்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா நேற்று ஆரம்பமான நிலையில் பெருமளவு பக்தர்கள் இரவு, பகலாக ஆலய தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர்.



இந்த நிலையில், நகர்ப் பகுதியில உள்ள பல வீதிகள் இருளில் மூழ்கிக் கிடப்பதால் பக்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு பக்தர்கள் செல்வதற்கு பாவிக்கப்படும் வைமன் வீதி முற்றாக இருளில் மூழ்கிக் காணப்படுவதாக பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வீதியில் தொடராக காணப்படும் வீதி விளக்குகள் சில நாட்களாக ஒளிராமையால் இருளில் மக்கள் பயத்துடன் பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் நகரத்தின் பல வீதிகளிலும் பல வீதிவிளக்குகள் பழுதடைந்து காணப்படுவதால் மாநகரசபை உடனடியாக மக்கள் நலன்கருதி அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.