Aug 17

தயிர்வடை சாப்பிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருகோணமலை பிரதான வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் தயிர்வடை வாங்கிச் சாப்பிட்ட குடும்பம் ஒன்றுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.


குறித்த உணவகத்தில் நபர் ஒருவர் நேற்று மாலை தயிர்வடை வாங்கி வீட்டிற்குக் கொண்டு சென்றுள்ளார். மாலை நேரத் தேனீருடன் தயிர்வடை சாப்பிட்டபோது குறித்த நபரின் மகன் கடித்த தயிர் வடைக்குள் புகைத்து மீதமான பீடித்துண்டு இருந்துள்ளது.

இதனையடுத்து குறித்த தயிர்வடையுடன் கிண்ணியா சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து உடனடியாக கடைக்கு விரைந்த சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்குதவாத பொருட்களை மீட்டதுடன் கடைக்கு காலவரையறையற்ற சீல் வைத்தனர்.

இதன்போது பழுதாகிய இறைச்சிப் பொரியல்கள், மாசி சம்பல், தயிர்வடை உள்ளிட்ட பல கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பில் நீதிமன்றத்திடம் வழக்குப் பதியப்படவுள்ளதாக சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.