Aug 17

மம்மி செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தைச் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட மனித உடலான ‘மம்மி’ ஒன்றை ஆராய்ச்சி செய்ததில், உடல்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளன.


கி.மு. 3500 – 3700 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் எள்ளில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் எண்ணெய், கோரைப்புற்களின் வேர்களில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, வேல மரப்பிசின் மற்றும் பைன் மரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் பிசின் ஆகியன உடல்களை மம்மிகள் ஆக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

.