Aug 17

ரொறன்ரோவில் Streetcar ஐ பயன்படுத்துபவர்கள் அதிகரிப்பு!

ரொறன்ரோ King Street Transit Pilot என்ற போக்குவரத்து திட்டதினை, முன்பை விட அதிகளவிலான மக்கள் பயன்படுத்திக்கொள்ளவதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அந்தவகையில் கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிகளில், (streetcars) போக்குவரத்து பயன்பாடானது, காலை வேளையில் சுமார் 35 சதவிகித்தாலும், பிற்பகல் 27 விகிதத்தாலும் அதிகரித்துள்ளது.

அத்துடன் காலை வேளையில் அதற்கான நம்பகத் தன்மையும் 85 விகிதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை Bathurst மற்றும் Jarvis தெருக்களுக்கு இடையிலான பயணத்தின் வேகம் அதிகரித்துள்ளதாகவும், மெதுவான பயண நேரம் சுமார் ஐந்து நிமிடங்களால் அதிகரித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கனடாவில் பருவகால மாற்றம் ஏற்பட்டுள்ள காரணமாக அதிகமானோர் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.