Aug 17

பாரிஸ் நகரில் அருட்திரு .தமிழ்நேசன் அடிகளார் எழுதிய தமிழியல் தடங்கள் நூல் வெளயீட்டு விழா

10 ஆம் திகதி வெள்ளிகிழமை பாரிஸ் நகரில் மன்னாரை சேர்ந்த அருட்திரு .தமிழ்நேசன் அடிகளார் எழுதிய தமிழியல் தடங்கள் என்ற நூல் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பிரான்சு கிளையினரால் வெளியிடப்பட்டது.

அக வணக்கத்துடன்  ஆரம்பிக்கபட்ட இந்தவிழாவினை  திருமதி .சந்திரகுமார். திருமதி.சாந்தன் .. திருமதி.ஜெமில். திருமதி.ராஜினி ஆகியோர் குத்து விளகேற்றி ஆரம்பித்து வைத்தனர்

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் துணைத்தலைவர் சரவணையூர் விசு செல்வராசா தலைமை தாங்கினார். திருமதி ராஜினி வரவேற்புரை நிகழ்த்தினார் .நூலின் ஆய்வுரையை உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பிரான்சு கிளை செயலாளர் அக்கினிக் கவிஞர் மா .கிறிஸ்டியன் நிகழ்த்தினார் .ஆசிரியர் .திரு.பசில்   திரு.வி நாதன். லண்டன் அங்கிள் திரு N.அருணகிரிநாதர்   கன்பொல்லை மக்கள் ஒன்றியத்தின்  தலைவர் திரு.M.பாஸ்கரன்.. திரைப்பட இயக்குனர்  திருமலையூரான் அசோக்குமார் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர் ..

நூலை தொழிலதிபர் திரு.சந்திரகுமார் ;மற்றும் அவரது துணைவியார் வெளியிட   தொழிலதிபர் எம்..டயஸ் அவர்கள் முதற்படியை பெற்றுக்கொண்டார் கலை நிகழ்சிகளை செல்வி திருச்செல்வம் நிவேதா வழங்கினார் .

விழாவின் இறுதியில் தாயகத்தில் இருந்து நூல் வெளியீட்டுக்காக பிரான்சுக்கு வருகை தந்திருந்த அருட்திரு.தமிழ்நேசன் அடிகளார் நன்றியுரை நிகழ்த்த விழா இனிதே முடிவடைந்தது ..

இந்த விழாவினை . உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பிரான்சு கிளையை சேர்ந்த திரு.ஜேம்ஸ். திருமதி .ரெமிலா நாதன் திரு எஸ்.நவரட்ணம் அவர்களுடன் கன்பொல்லை மக்கள் ஒன்றியத்தினர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .

விழாவின் சிறப்பம்சமாக விழா குறிபிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்தில் முடிவடைந்தது குறிபிடத்தக்கது