Aug 17

இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான ஏ.பி.வாஜ்பாயி அவர்களின் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது!

இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான ஏ.பி.வாஜ்பாயி அவர்களின் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது!

திரு.வாஜ்பாயி அவர்கள் கட்சி மாச்சரியங்களைத் தாண்டி மிகச் சிறந்த பண்பாளராகத் திகழ்ந்தவர்.

ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பாஜகவை ஒன்றிய ஆட்சி பீடத்தில் அமர்த்தி, இரண்டு முறை பிரதமராகப் பணியாற்றியவர்.

அவரது ஆட்சிகாலத்தில் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வலிந்து மக்கள் மீது ஒருபோதும் அவர் திணிக்க முயற்சித்ததில்லை.

குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அப்போது அங்கு ஆட்சியிலிருந்த தனது கட்சிக்காரரான தற்போதைய பிரதமர் மோடியை கண்டித்தவர் திரு. வஜ்பாயி அவர்கள்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை அமைத்த புகழுக்கும் உரியவர் திரு. வாஜ்பாயி அவர்கள்.

அவரது மறைவு இந்த தேசத்துக்கு பேரிழப்பாகும். அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது!