Aug 16

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.