Jun 05

ஆங்கிலம் பேச தெரியாதென ஊழியரை கடுமையாக திட்டிய பெண்!

ரொறொன்ரோ- ஸ்காபுரோவில் அமைந்துள்ள சீன பலசரக்கு கடை ஒன்றில் கடை ஊழியருக்கு ஆங்கிலம் தெரியாதென பெண் ஒருவர் கடுமையாக திட்டியுள்ளார். இச்சம்பவத்தை இளம்வதினர் ஓருவர் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை விராங் ஹொங் என்பவர் முகநூலில் பதிவு செய்துள்ளார். ஸ்காபுரோவில் அமைந்துள்ள Foody Mart பலசரக்கு கடையில் குறிப்பிட்ட பெண் ஊழியரை “சீனாவிற்கு திரும்பி போ” என திரும்ப திரும்ப கூறியுள்ளார். ஏனெனில் அவர்களால் தங்கள் கேள்விகளிற்கு ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாது.

“சீனாவிற்கு திரும்பி போ. இது கனடா. ஆங்கில நாடு” என நிலத்தை சுட்டிக்காட்டி அப்பெண் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

நின்றவர்கள் தலையிட்ட போது சிலர் மொழி பெயர்க்க உதவ முன்வந்தும் உள்ளனர்.ஆனால் அப்பெண் வேலை தலத்தில் ஆங்கிலம் தெரியாமல் இருப்பது சட்ட விரோதம் எனவும் கூறியுள்ளார்.

மொழி பெயர்ப்பை பெற மறுத்து தொடர்ந்தும் திட்டியுள்ளார்.

இவர்கள் ஓருவரும் ஆங்கிலம் கதைப்பதில்லை எனவும் கூறினார்.

இத்தகைய வார்த்தைகளை கனடாவில் முதல் தடவையாக கேட்பதாக ஹொங் ரொறொன்ரோ சிரிவி செய்தியில் கூறினார்.

இனவெறி ,அயல் நாட்டு வெறுப்பு மற்றும் விடாபிடித்தனம் கனடாவில் இன்னமும் நிலைத்திருப்பதாகவும் இதனை நிறுத்த கட்டாயம் முயல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொருட்கள் எதனையும் வாங்காது கடையை விட்டு வெளியேறும் வரை 15-20நிமிடங்கள் வரை திட்டியுள்ளார்.

இந்த வீடியோ முகநூலில் பல நூறு ஆயிரம் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.

இது சட்டத்திற்கு புறம்பானதாகும். தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதிகார பூர்வ மொழிகள் சட்டம் மத்திய நிறுவனங்களிற்கே பொருந்தும்.