Aug 16

பயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிவரும் மேற்கு ஆபிரிக்காவின் நைஜருக்கு, பெர்லினின் பூரண ஆதரவை வழங்குவதாக, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பிற்கான ஐரோப்பாவின் ஆதரவை நைஜர் கோரியிருந்த நிலையில் ஜேர்மன் அதிபர் நேற்று (புதன்கிழமை) இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜேர்மன் தலைநகருக்கு விஜயம் செய்துள்ள நைஜர் ஜனாதிபதி மஹ்மதூ இசோபூ, ”சட்டவிரோத குடியேற்றம், கல்வி பாதுகாப்பு, உள்ளூர் நிர்வாக கட்டமைப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றை சமாளிப்பதற்கான ஆதரவின் தேவையை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், நைஜருக்கான ஆதரவை வெளிப்படுத்தி ஜேர்மன் அதிபர் கூறுகையில், சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு நைஜர் எம்முடன் வெற்றிகரமாக இணைந்து செயற்பட்டு வருகின்றது. இதற்கு நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு நைஜர் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்நோக்கியுள்ளது. எனவே, லிபிய விவகாரத்தில் அரசியல் தீர்வை எட்டுவதற்கும், பங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கும் நாம் நைஜருடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்” எனத் தெரிவித்தார்.