Aug 16

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா: ஒருவழியாக கனவு நிறைவேறியது?

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நடிகை த்ரிஷாவின் கனவு ஒரு வழியாக நனைவாகியுள்ளது. 

காலா மற்றும் 2.0 படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை மெர்க்குரி, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். 

இந்த படத்தில் 40 நாட்கள் மட்டுமே நடிக்கும் ரஜினிகாந்திற்கு ரூ. 65 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு தவிர, தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள த்ரிஷாவுக்கு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகும்சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும், இப்படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில், பாபி சிம்ஹா ரஜினியின் மூத்த மகனாகவும், சனந்த் ரெட்டி இளைய மகனாகவும் வருகின்றனர். மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டியின் ஜோடியாக நடிக்கிறார்.