Aug 16

சர்ச்சைக்குரிய வைத்தியசாலையை பொறுப்பேற்கும் பெண் பணிப்பாளர்; அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள் இதுவரை வைத்தியசாலையில் நடைபெறுவதாக கூறப்படும் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பல விசித்திரமான சம்பவங்களை சந்தித்துள்ளது.

வைத்திய சாலைக்கு சிகிச்சை பெற வரும் முறையான நிர்வாக செயற்பாடுகள் இல்லாததன் காரணமாக பல அவலங்களை சந்தித்துள்ளனர்.

குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் குறித்து வைத்தியர்களுக்கு இடையிலான போட்டிகள், தனியார் வைத்தியசாலையின் தலையீடுகள், வைத்தியர்கள் கடமை நேரத்தில் வைத்திய சாலையில் இல்லாமை, சத்திர சிகிச்சை மற்றும் ஏனைய சிகிச்சைகளில் ஏற்படும் தாமதம் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் மரணங்கள், உரிய நேரத்திற்கு சிகிச்சை அளிக்காது இழுத்தடிப்பு செய்தல், நோயாளர்களின் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைகளுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு புதிய பணிப்பாளருக்கு உண்டு.

மிக முக்கியமாக மக்கள் தொடர்பாடல் பிரிவு ஒன்றை உருவாக்கி தொடர்ச்சியாக நோயாளர்களின் குறைபாடுகளையும் குற்றச்சாட்டுக்களையும் உள்வாங்கி செயற்படும் திட்டங்களை செயல்படுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள கறைபடிந்த பக்கங்களை இல்லாதொழிக்க வேண்டும் என்பதனை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள் இன்று 15/08/2018 சுகாதார அமைச்சினால் நியமனம் பெற்றுள்ளார்.

வைத்திய நிருவாக துறையில் சிரேஸ்டத்துவம் மிக்கவரான அவர் கடந்த ஏழு வருடங்களாக போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி பின் இவ்வருடம் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளராக நியமனம் பெற்று நேற்றுவரை அங்கு கடமையாற்றி வந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின

பணிப்பாளர் இப்றாலெப்பை ஓய்வு பெற்று சென்ற நிலையில் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.