Jun 05

வருங்கால கணவனின் கைகளில் உயிரை விட்ட காதலியின் உருக்கமான நிமிடங்கள்

லண்டன் பிரிட்ஜில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதலில் கனடியப் பெண் தனது வருங்கால கணவனின் கைகளில் உயிரை விட்டார் என கணவரின் சகோதரன் தெரிவித்தார்.

கிறிஸ்ரின் ஆசிபால்ட் பிரிட்டிஷ் கொலம்பியா காட்லெகரை சேர்ந்தவர். சனிக்கிழமை லண்டனில் இடம்பெற்ற பயங்கர வாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு பேர்களில் இவரும் ஒருவராவார்.இது ஒரு “‘கொடூரமான பயங்கரவாத தாக்குதல்” என யு.கே.பிரதம மந்திரி திரேசா மே விபரித்துள்ளார்.

வார விடுமுறையை கழிக்க தனது வருங்கால கணவரான ரெயில் வெர்குசன் என்பவருடன் லண்டன் சென்றார்.

இவரது வருங்கால கணவர் இவரை தனது கைகளில் தாங்கியவாறு இவர் இறப்பதை கவனித்ததாக தெரிவித்தார்.. இப்பெண் கல்கரியில் வீடற்றவர் தங்குமிடமொன்றில் பணிபுரிந்தார்.

லண்டன் பிரிட்ஜில் நடந்து கொண்டிருக்கையில் தாக்குதல் இடம்பெற்றது. இவரின் குடும்பத்தினர் லண்டன் செல்கின்றனர்.