Aug 16

கேரள மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்: ராகுல் காந்தி

கேரள மாநிலத்தில் பெய்யும் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு ஏனைய மாநிலங்களை சேர்ந்த மக்களும் தங்களது பங்களிப்பை வழங்குவதற்கு முன்வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோல் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வறிவித்தலை பதிவேற்றியுள்ளார். அதிலும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அத்துடன் நிவாரண முகாம்களும் தற்போது  நிரம்பிவிட்டன.

ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அம்மக்களுக்கு  உதவ வேண்டியது அவசியமாகும். இதனால்  முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்க முன்வர வேண்டும்.

அத்துடன் இந்த நிவாரண உதவியை ஏனைய மாநிலங்களிலுள்ள மக்கள், கேரள அரசின் இணையத்தளமான donation.cmdrf.kerala.gov.in  என்ற இணையதள முகவரியின் ஊடாக தொடர்புகொண்டு வழங்க முடியும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

கேரள மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்யும் அடைமழைக்காரணமாக இன்றைய நாளில் மாத்திம் இதுவரை சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.