Aug 16

முற்றாக கண்ணிவெடி அகற்றும் பணி


யாழ்ப்பாணத்தில் 2019ம் ஆண்டு நிறைவடையும் போது முற்றாக கண்ணிவெடி அகற்றும் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதாக, இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

2002ம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இன்னும் 24 சதுர கிலோமீற்றர் பரப்பிலேயே நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.இந்த நிலையில் அடுத்த ஆண்டு நிறைவடைவதற்குள், இந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி நாட்டை 2020ம் ஆண்டுக்குள் நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாற்றும் அரசாங்கத்தின் இலக்கை அடைய முடியும் என்று, அந்த நிறுவனத்தின் தலைவர் லூயிஸ் வோகன் தெரிவித்துள்ளார்.எனினும் இந்த பணிகளுக்கு மேலும் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.