Aug 16

பொலன்னறுவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்..


பொலன்னறுவை , மனம்பிட்டி மகாவலி கங்கையில் மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் 25 படகுகள் இனந்தெரியாத சிலரால் தீ மூட்டப்பட்டுள்ளது.


நேற்று இரவு இவ்வாறு குறித்த படகுகள் தீ மூட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான காவற்துறை விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் , பொலன்னறுவை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது 8 மீன் வாடிகளுக்கு இனந்தெரியாதவர்களால் தீவைக்கப்பட்டது.

இதனால் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் முற்றாக சேதமடைந்தன.