Aug 16

வவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன!

வவுனியாவில் தனியார் பேரூந்துகள் இன்று வழமைபோல் சேவையில் ஈடுபட்டுள்ளதாக  இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டப்பணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, தனியார் பேரூந்து சாரதிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலை நிறுத்தம் இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் உயர் தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதியும் ஏனைய பயணிகளின் நன்மை கருதியும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கமுடியாது என தெரிவித்திருந்தன.

இந்நிலையில் பரவலாக சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் வவுனியா மற்றும் வட.மாகாணத்தில் அனைத்து பேரூந்து சேவைகளும் வழமைபோல் இடம்பெற்றதுடன் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்காது தமது பயணங்களை தொடர்ந்திருந்தனர்.