Aug 16

லூர்த்தில் சரணடைந்த தமிழர்கள்!

கத்தோலிக்க மக்களின் மிக முக்கியமான திருநாளான மரியாளின் விண்ணேற்ற திருநாளை முன்னிட்டு பிரான்சின் லூர்த் ஆலயத்தில்  பெருநாள் இடம்பெற்றது.


லூர்து அன்னையில் பக்திமிக்க அடியார் கூட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் முக்கிய இடம் உண்டு.லூர்து அன்னையில் பக்திமிக்க அடியார் கூட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்களுக்கும் முக்கிய இடம் உண்டு.

இதனடிப்படையில் இன்று லூர்தில் இடம்பெற்ற மரியன்னையின் விண்ணேற்ற திருநாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில் அதில் ஏராளமான தமிழ் மக்களும் பங்கெடுத்துள்ளனர்.

இந்தமுறையும் லூர்த் ஆலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

மரியன்னையின் விண்ணேற்ற திருநாளை முன்னிட்டு மன்னர் மடு திருத்தலத்திலும்   வருடாந்த திருவிழா இடம்பெற்றதும் அதில் இலங்கை முழுவதும் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் பங்கெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.