Aug 16

தொடரும் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அபராதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்து தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது.

மேல்மாகாண தனியார் பேருந்து சாரதிகள் சங்கம், ஸ்ரீலங்கா தனியார் பயணிகள் போக்குவரத்து சேவை சங்கம், துறைமுக தனியார் கொள்கலன் செலுத்துனர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளித்துள்ளன.

எனினும், இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் பேருந்து தொழிற்சங்கங்களுக்கு இடையில் பெரும் முரண்பட்ட நிலையே ஏற்பட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பினை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் புறக்கணித்துள்ளதாக அறிவித்துள்ளன.