Aug 16

தமிழகத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை தடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என மத்திய அமைச்சர் பொம்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். 

அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக  செயல்படுத்தப்பட்டால் அங்கு பயங்கரவாத அமைப்புகளால் நிரந்தரமாக உள்ளே நுழைய முடியாது என்பதால்தான் மக்களிடம் தவறான பிரச்சாரங்களையும், அச்சங்களையும் சிலர் விதைத்து வருகின்றனர்,

எனவே இதுபோன்ற  செயல்களை பரப்புவோர்களை தமிழக மக்கள் புறக்கனிக்க வேண்டும். இதேபோல் தமிழகத்தில் நடைபெறும் முறைகேடுகள், ஊழல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’ என்று கூறினார்.