Aug 15

புதிய வீடுகள் துணுக்காயில் 720 குடும்பங்களுக்கு

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


முல்லைத்தீவு பிரதேச செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 720 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளதுடன், 25 குடும்பங்களுக்கு தனிநபர் மலசலகூடங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், 24 மத வழிபாட்டுஸ்தலங்கள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதுடன், இரண்டு முன்பள்ளிகளும், மூன்று சிறிய நீர்ப்பாசனக் குளங்களை புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.