Aug 15

விமான சேவைகள் இடைநிறுத்தம்!ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரும்வரை கேரளாவுக்கான விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


கேரளாவில் பெய்துவரும் அடை மழையின் காரணமாகவே இந்த விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்டுநாயக்க-கொச்சின் விமானப் போக்குவரத்துச் சேவை மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் வரலாறுகணாத மழை பெய்துவருவதால் இதுவரை பெருமளவிலான மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.