Aug 15

சாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து


சாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கயுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை இணைப்பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார். 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.