Aug 15

நான் இறக்க விரும்பவில்லை: உயிரை பணயம் வைத்து இளைஞர் செய்த மிரட்டலான செயல்

கனடாவில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து திருட முயன்ற திருடர்களை அங்கு பணியும் இளைஞர் தைரியமாக சமாளித்துள்ளது பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.Hamilton-ல் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த வெள்ளிக்கிழமை கடை ஊழியரான சலாஹால்தீன் ஓடோ என்பவர் தனியாக இருந்துள்ளார்.

கடையை பூட்டாமல் அவர் இருந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு முகத்தை கைக்குட்டையால் மூடிய இரண்டு திருடர்கள் கடை உள்ளே நுழைந்துள்ளனர்.பின்னர் அங்குள்ள பணத்தை தரும்படி சலாஹால்தீனை மிரட்டியுள்ளனர்.

இருவரில் ஒரு திருடனிடம் துப்பாக்கி இருப்பதை பார்த்த சலாஜால்தீன் அதை எடுக்க முயன்று இருவருடனும் கட்டிபுரண்டு சண்டை போட்டுள்ளார்.பின்னர் பயந்து போன திருடர்கள் கடையில் எதையும் திருடாமல் தப்பியோடியுள்ளனர்.சலாஜால்தீனுக்கு கை வீங்கிய நிலையில் பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை.

சிசிடிவியில் பதிவான திருடர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் அவர்களின் உயர விபரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்தி சலாஜால்தீன் கூறுகையில், திருடர்கள் வந்த போது என்னை பற்றி மட்டுமே நான் யோசித்தேன்.நான் இறக்கக்கூடாது என்பது மட்டுமே என் மனதில் அப்போது ஓடியது என கூறியுள்ளார்.