Aug 15

இலங்கையின் பிரதமர் ரணில் மடுவில்!!!!

மன்னார் மடு திருத்தலத்துக்கு தற்போது இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகைதந்துள்ளதாக மடுவிலிருந்து எமது சிறப்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


மன்னார் மடு திருத்தலத்தில் இன்று (15.08.2018) காலை மடு அன்னையின் வருடத்தின் மாபெரும் உற்சவமான ஆவணி உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை முழுவதும் இருந்து இலட்ஷக்கணக்காண பக்தர் வருகைதந்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த மடு அன்ணையின் உற்சவத்தின் இறுதி நாளான இன்று திருவிழா திருப்பலியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விசேட அழைப்பின் பேரில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் வருகையால் தென்னிலங்கை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 6-ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான குறித்த பெருவிழா இன்று காலை (15.08.2018) திருவிழா திருப்பலி நடைபெற்று முடிவதுடன் குறித்த ஆவணி உற்சவம் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.