Aug 15

நாடு முழுவதும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் அதிகரிக்கும் சாத்தியம்

நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் இன்று குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் குருநாகல், காலி, மாத்தறை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.