Aug 14

சிற்றூர்ந்து மோதிய சம்பவம் தீவிரவாத செயற்பாடு என தெரிவிப்பு

பிரித்தானிய நாடாளுமன்றின் வௌியே அமைந்துள்ள பாதுகாப்பு தடைகளில் சிற்றூர்ந்தொன்று மோதிய சம்பவம் தீவிரவாத செயற்பாடாக கருதப்படுவதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சிற்றூர்ந்து பாரசாரிகள் மீது மோதியதன் பின்னர் பாதுகாப்பு தடையை நோக்கி செலுத்தப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதில் இருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வௌிவரவில்லை.