Aug 14

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்!

கயிறு என நினைத்து கொடிய விசப் பாம்பை கையில் தூக்கியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வவுனியா புனேவ என்ற பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

வவுனியா மாவட்டம் புனேவ பிரதேசத்தில் மாடு வளர்க்கும் ஒருவர் வயலில் மேய்வதற்காகக் கட்டப்பட்டிருந்த மாட்டை வீட்டிற்குக் கொண்டுவருவதற்காகச் சென்றபோதே இடம்பெற்றுள்ளது.

ஒரு பசு மாட்டுடன் கன்றுக்குட்டி ஒன்றையும் குறித்த நபர் வயலில் கட்டியிருந்தார். மாட்டோடு பிணைக்கப்பட்டிருந்த கயிறு கம்பி ஒன்றில் கட்டப்பட்டு வயலில் ஊன்றப்பட்டிருந்தது.

நேற்று மாலை பொழுது மங்கிய நேரத்தில் வயலுக்குச் சென்றவர் மாடு கட்டப்பட்டிருந்த கம்பியை இழுத்துள்ளார். அதன்போது கன்றுக் குட்டியும் அருகில் கட்டப்பட்டிருந்தது. கன்றுக்குட்டியின் கயிறு படுமாட்டின் கயிறுடன் சிக்காடியதாக நினைத்த குறித்த நபர் கயிறைப் பிடிப்பதாக நினைத்து சுருட்டைப் பாம்பு ஒன்றைப் பிடித்துள்ளார்.

கயிறு நொழுநொழுப்பாக இருப்பதை உணர்ந்த அவர் நன்றாக உற்றுப் பார்த்தபோது கையில் பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருந்தது.

இதனை உணர்ந்த அவர் பாம்பையும் கயிறையும் எறிந்துவிட்டு தலைதெறிக்க கத்திக்கொண்டு ஓடியுள்ளார். அவர் ஓடியதைப் பார்த்து பயந்த பசுவும் கன்றும் வேறொரு திசையில் வேகமாக ஓடிச் சென்றுள்ளன.

எவ்வாறாயினும் பிரஸ்தாப நபரை அந்த சுருட்டைப் பாம்பு தெய்வாதீனமாகக் கொத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சுருட்டைப் பாம்புகள் நான்கு கொடிய விசம் படைத்த பாம்புகளில் ஒன்றாக விளங்குகின்றன. இலங்கையின் வயல் புறங்களில் சுருண்ட நிலையில் காணப்படும் இவ்வகைப் பாம்புகள் தம்மைத் தீண்டுபவர்கள் குறித்து உச்சக்கட்டப் பொறுமையினைக் கடைப்பிடிக்கின்றன. இதனால் சுருட்டைப் பாம்பு சோம்பேறித்தனமானது என்கிறார்கள்.

ஆனாலும் அவை கோபமுற்றால் ஆக்ரோசமாகக் கொத்தி கொடிய நஞ்சை மனிதர் உடலுக்குள் வேகமாகச் செலுத்திவிடும் தன்மை கொண்டன. கயிறு என நினைத்து கொடிய விசப் பாம்பை கையில் தூக்கியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வவுனியா புனேவ என்ற பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

வவுனியா மாவட்டம் புனேவ பிரதேசத்தில் மாடு வளர்க்கும் ஒருவர் வயலில் மேய்வதற்காகக் கட்டப்பட்டிருந்த மாட்டை வீட்டிற்குக் கொண்டுவருவதற்காகச் சென்றபோதே இடம்பெற்றுள்ளது.

ஒரு பசு மாட்டுடன் கன்றுக்குட்டி ஒன்றையும் குறித்த நபர் வயலில் கட்டியிருந்தார். மாட்டோடு பிணைக்கப்பட்டிருந்த கயிறு கம்பி ஒன்றில் கட்டப்பட்டு வயலில் ஊன்றப்பட்டிருந்தது.

நேற்று மாலை பொழுது மங்கிய நேரத்தில் வயலுக்குச் சென்றவர் மாடு கட்டப்பட்டிருந்த கம்பியை இழுத்துள்ளார். அதன்போது கன்றுக் குட்டியும் அருகில் கட்டப்பட்டிருந்தது. கன்றுக்குட்டியின் கயிறு படுமாட்டின் கயிறுடன் சிக்காடியதாக நினைத்த குறித்த நபர் கயிறைப் பிடிப்பதாக நினைத்து சுருட்டைப் பாம்பு ஒன்றைப் பிடித்துள்ளார்.

கயிறு நொழுநொழுப்பாக இருப்பதை உணர்ந்த அவர் நன்றாக உற்றுப் பார்த்தபோது கையில் பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருந்தது.

இதனை உணர்ந்த அவர் பாம்பையும் கயிறையும் எறிந்துவிட்டு தலைதெறிக்க கத்திக்கொண்டு ஓடியுள்ளார். அவர் ஓடியதைப் பார்த்து பயந்த பசுவும் கன்றும் வேறொரு திசையில் வேகமாக ஓடிச் சென்றுள்ளன.

எவ்வாறாயினும் பிரஸ்தாப நபரை அந்த சுருட்டைப் பாம்பு தெய்வாதீனமாகக் கொத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சுருட்டைப் பாம்புகள் நான்கு கொடிய விசம் படைத்த பாம்புகளில் ஒன்றாக விளங்குகின்றன. இலங்கையின் வயல் புறங்களில் சுருண்ட நிலையில் காணப்படும் இவ்வகைப் பாம்புகள் தம்மைத் தீண்டுபவர்கள் குறித்து உச்சக்கட்டப் பொறுமையினைக் கடைப்பிடிக்கின்றன. இதனால் சுருட்டைப் பாம்பு சோம்பேறித்தனமானது என்கிறார்கள்.

ஆனாலும் அவை கோபமுற்றால் ஆக்ரோசமாகக் கொத்தி கொடிய நஞ்சை மனிதர் உடலுக்குள் வேகமாகச் செலுத்திவிடும் தன்மை கொண்டன.