Aug 14

முல்லைத்தீவு மீனவர் பிரச்சினை – ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது


முல்லைத்தீவில் மீனவர்களின் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சரவையில் கதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மனோகணேசன் அமைச்சரவையில் ஜனாதிபதியின் கவனத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது எதிர்வரும் 22ஆம் திகதி தான் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது அது தொடர்பாக பேச்சுக்களை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.