Aug 14

'நேவி சம்பத்' கைது

11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தன ஹெட்டிஆராச்சி என்ற 'நேவி சம்பத் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தனர். 

இந்நிலையில் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.