Mar 14

அரசியல் அமைப்பின் 6ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 6ம் திருத்தமானது மனித பேச்சுச் சுதந்திரத்திற்கும் மனச்சாட்சிக்கும் விரோதமானது என்பதை ஐ நாசபைக்கு அறிவிப்பதில் உலகத்திலுள்ள சட்டவாளர்களை இணையுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமை நாம் அறிந்த செய்தியே.

இதனை முன்னிட்டு கென்னடி-401பெருந்தெருச் சந்தியில் அமைந்துள்ள டெல்ரா கோட்டலில் பிரபல வழக்கறிஞரும் மனித உரிமைவாதியுமான பாபறா யக்மன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் பல சட்டஅறிஞர்கள் கலந்து கொண்டனர். சிறிலங்காவின் அரசியல் அமைப்பை ஆய்வு செய்த பாபறா யக்மன் கூறுகையில் அது பெரும்பான்மை இனத்தின் நலன்களை காப்பாற்றுவதற்காக இயற்றப்பட்டுள்ளதாகவும் சிறுபான்மையினங்களை நசுக்குவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டமானது தமிழ் மக்களுக்கு எதிரானதும் அராஐகமுமானது எனவும் குறிப்பிட்டாh.;; நா.க.த.அரசாங்கத்தின் பிரதமர் விஉருத்திரகுமாரன் அவர்கள் ஸ்கைப் மூலமாக சொற்பொழிவாற்றுகையில் நீதிக்கான இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். போர்க்குற்றம் சாட்டப்பட்ட சிறீலங்கா அரசினைக் கண்காணிப்பதற்காக மனித உரிமைச் சபையானது ஒரு அறிஞர் குழுவை நியமிக்க வேண்டும் என்று கருத்தை வலியுறுத்தினார்.

 இந் நிகழ்வில் வழக்கறிஞர்களான டேவிட்மாதாஸ், நாதன் சிறீதரன், பாக்கியலக்ஸ்மி வாசன், டிலானி குணராசா, வி.பாலசுப்பிரமணியம், தம்பு கனகசபை, கனகமனோகரன் அவர்களும் பேராசிரியர் சந்திரகாந்தன் திரு.அன்ரன் பிலிப் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளை நா.க.த.அரசாங்கத்தின் செனட்டர் உசா சிறீஸ்கந்தராசா அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார். திரு.கௌதம் வாசன் அவர்கள் இந்நிகழ்வை வழிநடத்தினார்.